X

உண்மை சரிபார்ப்பு: காணொளியில் காணப்படும் பெண் ஒரு செயற்கைப் பெண் அல்ல, அவர் ஒரு வீடியோ விளையாட்டில் உள்ள ஒரு அனிமேட்டட் கதாப்பாத்திரம்.

விஷ்வாஸ் நியூஸ் தன புலன்விசாரணையின் மூலம் இந்தக் க்ளைம் பொய் என்று கண்டுபிடித்தது. அந்தக் காணொளியில் உள்ள பெண் ஒரு ரோபோ அல்ல, அவள் ஒரு வீடியோ விளையாட்டுக் கதாப்பாத்திரம்/

  • By Vishvas News
  • Updated: February 28, 2022

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்). பல சமூக ஊடகத் தளங்களில் ஒரு காணொளி இந்நாட்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த வைரல் காணொளியில், ஒரு பெண் பேசுவது போல் காட்சி உள்ளது. இந்தப் பதிவின் மூலம் இந்தப் பெண் சீனாவில் செய்யப்பட்ட ஒரு செயற்கைப் பெண் என்று க்ளைம் செய்யப்படுகிறது. விஷ்வாஸ் நியூஸ் இந்த க்ளைம் பொய் என்று தன புலன் விசாரணையில் கண்டு பிடித்தது. இந்தக் காணொளியில் காணப்படும் பெண் ஒரு செயற்கைப் பெண் அல்ல, அது ஒரு வீடியோ விளையாட்டில் உள்ள ஒரு கதாப்பாத்திரம்.


இந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?

“சீனா முதல் நெகிழி பெண்ணை உருவாக்கி உள்ளது, அவளுக்கு ஆன்மா கிடையாது, உலகின் முடிவு நெருங்கி விட்டது.” என்று அந்த வைரல் பதிவு க்ளைம் செய்கிறது.

இந்தப்பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பை இங்கே காணலாம்.

புலன் விசாரணை

இந்தக் காணொளியை சோதிக்க, இந்தக் காணொளியை நாங்கள் இன்விட் கருவியில் இட்டு அதன் முக்கிய பிரேம்களை வெளியெடுத்தோம். பிறகு கூகிள் ரிவர்ஸ் இமேஜை பயன்படுத்தி இந்த முக்கிய பிரேம்களைத் தேடினோம். இதே காணொளியை ப்ளேஸ்டேஷனின் சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் 23 மே 2018 என்ற தேதியில் நாங்கள் கண்டுபிடித்தோம். இந்தக் காணொளியோடு இருந்த விவரக்குறிப்பு இவ்வாறு இருந்தது: “டெட்ராய்ட் : மனிதன் ஆகுங்கள் – ஷார்ட்ஸ்: சலோ |பிஎஸ் 4.”

முக்கிய வார்த்தைகளை வைத்து தேடியதில், டெட்ராய்ட்: பீயிங் ஹியுமன் என்பது குவாண்டிக் ட்ரீம்-ஆல் உருவாக்கப்பட்டு சோனி இன்டர்ஆக்டிவ் என்டர்டெயின்மென்ட்-ஆல் 2018-இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு வீடியோ விளையாட்டு என்று கண்டுபிடித்தோம். சலோ இந்த விளையாட்டில் ஒரு கதாப்பாத்திரம்.

தேடித் பார்த்ததில் சலோ டெட்ராய்ட் என்பது  ST200 Android: Being Human-இல் அந்த விளையாட்டின் முக்கிய மெனுவில் ஹோஸ்டஸ் ஆகத் தோன்றுபவள் என்பது தெரிய வந்தது. அவள் முதலில் விளையாடுபவருக்கு அவர்கள் செட்டிங்களையும் அனுபவங்களையும் அவர்களுக்குத் தேவைப்படும்படி மாற்றி அமைத்துக் கொள்ள உதவுகிறாள். பிறகு அவள் முக்கிய மெனுவிலேயே தங்கியிருந்து விளையாட்டின் தெரிவுகளையும் நிகழ்ச்சிகளையும் பற்றி கேள்விகளை கேட்கவும் செய்கிறாள்.

நாங்கள் இணைய வல்லுனரும் விளையாட்டு ஆர்வலருமான ஆயுஷ் பரத்வாஜ் என்பவரை அணுகி இதைப்பற்றிக் கேட்டோம். அவரும் “சலோ என்பது ஒரு பீயிங் ஹியுமன் விளையாட்டில் ஒரு ஹோஸ்டஸ். அவள் ஒரு அசைவூட்டப்பட்ட (அனிமேட்டட்) கதாப்பாத்திரம் என்று உறுதி கூறினார்.

இந்தப்பதிவு மாத்யூ அப்பையா க்வார்டெங் என்கிற பயனரால் பகிரப்பட்டது. அந்தப்பயனர் ஃபேஸ்புக்கில் 2.8 ஆயிரம் நண்பர்களைக் கொண்டிருக்கிறார் மேலும் அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் தன புலன்விசாரணையின் மூலம் இந்தக் க்ளைம் பொய் என்று கண்டுபிடித்தது. அந்தக் காணொளியில் உள்ள பெண் ஒரு ரோபோ அல்ல, அவள் ஒரு வீடியோ விளையாட்டுக் கதாப்பாத்திரம்/

  • Claim Review : “சீனா முதல் நெகிழி பெண்ணைத உருவாக்கி உள்ளது, அவளுக்கு ஆன்மா கிடையாது, உலகின் முடிவு நெருங்கி விட்டது.” என்று அந்த வைரல் பதிவு க்ளைம் செய்கிறது.
  • Claimed By : மாத்யூ அப்பையா க்வார்டெங்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later