X

உண்மை சரிபார்ப்பு: இது ஒரு உண்மையான கடற்கன்னி அல்ல; ஒரு குறும்படத்தின் காட்சி, போலியான கூற்றுடனான வைரலாகும்.

விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என்று தெரியவருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோ உண்மையில் ஒரு குறும்படத்தின் ஒரு பகுதியாகும்.

  • By Vishvas News
  • Updated: November 28, 2021

புது டெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). மீனைப் போன்ற தோற்றத்தில் பெண் ஒருவர் காணும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது இலங்கையின் கடற்கரையில் காணப்பட்ட உண்மையான கடற்கன்னி என இடுகையோடு கோரி வருகின்றனர். விஸ்வாஸ் நியூஸ் தன்னுடைய விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என தெரியவருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோ உண்மையில் ஒரு குறும்படத்தின் காட்சி.

வைரல் இடுகையில் என்ன இருக்கிறது?

‘சம்பு நாக்’ முகநூல் பயனர், வைரலான வீடியோவைப் பகிர்ந்து, ‘உண்மையான மீன் பெண்’ என்று எழுதினார்.

இடுகையின் காப்பக இணைப்பை இங்கே காணலாம்

புலனாய்வு

இந்த இடுகையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, விஸ்வாஸ் நியூஸ் இந்த வீடியோவின் முக்கிய பிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியது. ஜூன் 2021 இல் டிரிப் பிஸ்ஸோ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த வைரல் கிளிப்களின் நீண்ட வீடியோவைக் கண்டோம். வீடியோவுடன் எழுதப்பட்ட விளக்கத்தின்படி, கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவாக எடுக்கப்பட்ட படம் இது. நடிகர்கள் மற்றும் குழுவினருக்கான பாராட்டுகளும் படத்தின் முடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இப்படத்தில் காயத்திரி ஜெயமன்னா என்ற நடிகை கடற்கன்னியாக நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் உதய் ஹவாகமா.

இது குறித்து ட்ரிப் பிஸ்ஸோவை மெயில் மூலம் தொடர்பு கொண்டோம். பதிலுக்கு ஒரு தொலைபேசி எண் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்த தொலைபேசி இலக்கத்தில் ஹஷன் மதுஷ்காவுடன் உரையாடினோம். அவர் எங்களிடம், “இது ஒரு விழிப்புணர்வு படத்தின் காட்சி என்று கூறினார். கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து பொதுமக்களிடையே அனுதாபத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு இந்தப் படம் எடுக்கப்பட்டது. கடலில் எண்ணெய் கசிவுகள் மற்றும் இரசாயன கசிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இந்தப் படத்தின் மூலம் இந்த விஷயத்தை மக்களுக்கு உணர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் படத்தை உதய் ஹவாகமா இயக்கியுள்ளார்.

கடற்கன்னி எப்படி உருவாக்கினார்கள் என்று காட்டப்பட்ட வீடியோவையும் நம்முடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், இந்த கடற்கன்னி எவ்வாறு ஒப்பனையின் உதவியுடன் செய்யப்பட்டது என்பதை ஒருவர் எளிதாகக் காணலாம். வீடியோவை இங்கே பார்க்கலாம். கிளிப்பில் மெரூன் நிற டிசட்டை அணிந்திருப்பவர் ஹஷன் மதுஷ்கா.

பொய்யான கூற்றுடன் வைரலான பதிவைப் பகிர்ந்த சம்பு நாக் என்ற பயனரை சுமார் 227 பேர் பின்பற்றுகின்றனர்.

निष्कर्ष: விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என்று தெரியவருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோ உண்மையில் ஒரு குறும்படத்தின் ஒரு பகுதியாகும்.

  • Claim Review : ‘உண்மையான மீன் பெண்’ கோரப்பட்டது
  • Claimed By : சம்பு நாக்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later