X

உண்மை சரிபார்ப்பு: மும்பை மருத்துவமனையின் டீனின் பெயர் குறித்த வைரல் க்ளைம் போலியானது.

தடுப்பூசிக்கு எதிரான மருத்துவர், டாக்டர் தருண் கோத்தாரி நாயர் மருத்துவமனையின் டீன் என்கிற வைரல் க்ளைம்கள் போலியானவை. டாக்டர் கோத்தாரி இண்டோ அமெரிக்கன் ஹெல்த்கேர் என்கிற தன் சொந்த க்ளினிக்கை புது தில்லியில் நடத்தி வருகிறார்.

  • By Vishvas News
  • Updated: August 10, 2021

விஷ்வாஸ் நியூஸ் (புது தில்லி): சமூக ஊடகஙகள் பலவற்றில் பரவலாக பகிரப்படும் ஒரு வீடியோவை விஷ்வாஸ் நியூஸ் கண்டது. அந்த வீடியோவில், டாக்டர் தருண் குமார் என்பவர் நாயர் மருத்துவமனை, மும்பை, டீன் என்றும் அவர் எம்பிபிஎஸ் எம்டி படித்தவர், அவர் மாஸ்க் அணிய வேண்டாம், சமூக இடைவெளி நடைமுறைகளை பின்பற்ற வேண்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார் என க்ளைம் செய்யப்பட்டிருந்தது.

விஷ்வாஸ் நியூஸ், தனது புலனாய்வில் இந்த வீடியோ தவறாக வழிநடத்துவதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்த வீடியோ பொய்யான க்ளைம்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

க்ளைம்:

ஃபேஸ்புக் பயனர் அஸ்லி பதான், இந்த வைரல் வீடியோவை ஒரு குழுவில் பகிர்ந்து பின்வருமாறு எழுதினார்: டாக்டர் தருண் கோத்தாரி, டீன், நாயர் மருத்துவமனை, மும்பை (எம்.பி.பி.எஸ்/எம்.டி) எஸ்பி. எம்ஆர்டி டிபி

இந்த 1:34 அளவு வீடியோ க்ளிப்பில், ஒரு கூட்டத்திற்கு நடுவே ஒரு நபர் நின்றுகொண்டு மக்களை மாஸ்க் அணியாதீர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதீர்கள் என்று வலியுறுத்துவதோடு தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றும் கூறுகிறார்.

இந்த வைரல் பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பை இங்கே காணுங்கள்.

புலனாய்வு:

இந்த வீடியோவில் உள்ள முக்கிய வாசகத்தை கவனித்ததில் அதில் எழுத்துப்பிழை இருப்பதைக் கண்டோம். அதில் டீன் (Dean) என்னும் ஆங்கில வார்த்தை டிஐஎன் (Din) என்று எழுதியுள்ளது. அதோடு, நாயர் மருத்துவமனை (Nair) எனும் மும்பை மருத்துவமனையின் பெயரும் என்ஏஒய்ஏஆர் (Nayar) என்று தவறாக உள்ளது.

விஷ்வாஸ் நியூஸ் எளிதான கூகுள் தேடலைப் பயன்படுத்தியது. நாங்கள் முக்கிய வார்த்தைகளான “டாக்டர் தருண் கோத்தாரி”. “ஆன்டி-வேக்ஸின்” போன்ற வார்த்தைகளால் தேடினோம். இது எங்களை டாக்டர் தருண் கோத்தாரியின சுட்டுரை பக்கத்துக்குக் கொண்டுசென்றது.

இந்த டுவிட்டர் சுயவிவரக்குறிப்பில் இவ்வாறு இருந்தது: டாக்டர் தருண் கோத்தாரி எம்பிபிஎஸ், எம்.டி, கல்வியாளர், போராளி, செயற்பாட்டாளர், ஊக்குவிப்பு பேச்சாளர், எழுத்தாளர்.

இதில் எங்கும் அவர் ஒரு மருத்துவமனையின் டீன் என்று குறிப்பிடப்படவில்லை. அதோடு, அவருடைய அமைவிடத்தை காட்டும் லொகேஷன் டேகும் அவர் புது தில்லியில் வாழ்வதாகத் தான் காட்டியதே தவிர மும்பையைக் காட்டவில்லை.

இருந்தபோதும், அவருடைய பதிவுகளின் மூலமாக அவர் பெருந்தொற்றை ஒரு மோசடியாக நினைப்பதும் அதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலைத்தளத்தை கொண்டிருப்பதும் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்ததாக, நாங்கள் ஊடக அறிக்கைகளைத் தேடினோம். இந்த மருத்துவர் தொடர்ச்சியாக முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி வேண்டாம் என்று கூறிவருவதால், அவரைப் பற்றிய செய்தி கட்டாயமாக இருக்கும் என்று விஷ்வாஸ் நியூஸ் கருதியது. நாங்கள் நவ்பாரத் டைம்ஸ் இல் ஒரு செய்தி துணுக்கைக் கண்டோம்.

 “நீங்கள் மாஸ்க் அணிந்தால் இறந்துவிடுவீர்கள்” என்று டாக்டர் தருண் கோத்தாரி கூறியதற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளதாக அந்தச் செய்தியில் இருந்தது.

புது தில்லியில் பதிவான அறிக்கையில், சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் கொண்ட வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து தில்லி காவல்துறை குற்றப் பிரிவு டாக்டர் தருண் கோத்தாரி மீது வழக்கு பதிவு செய்ததாகவும் விசாரணை துவங்கியுள்ளதாகவும் உள்ளது. அந்தச் செய்தியில், “டாக்டர் தருண் கோத்தாரி பஸ்ச்சிம் விஹாரில் வசிப்பவர். அவர் எம்பிபிஎஸ் மற்றும் எடி (ரேடியாலஜி) உதய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அவர் விஷ்வ சக்தி பார்ட்டி என்கிற பெயரில் ஒரு கட்சியை நடத்தி அதற்கு தலைவராக உள்ளார். அவருடைய சர்ச்சைக்குரிய வீடியோக்களில் பலவும் சமூக ஊடகங்களில் வைரலாக உள்ளது.” என்று இருந்தது.

கூகுளில் தேடியதற்குப் பின், அவர் மருத்துவமனையின் தொடர்பு எண் கிடைத்தது. விஷ்வாஸ் நியூஸ் உடன் பேசிய மருத்துவமனைப் பணியாளர் கூறியதாவது: ”டாக்டர் தருண் கோத்தாரி ஒரு ரேடியாலஜிஸ்ட் அவர் ”இண்டோ அமெரிக்கன் ஹெல்த்கேர்“ என்கிற பெயரில க்ளினிக் நடத்திவருகிறார். இந்த க்ளினிக் பீராகர்ஹி, தில்லியில் அமைந்துள்ளது.“

விஷ்வாஸ் நியூஸ் நாயர் மருத்துவமனையின் அலுவலர்களிடமும் விசாரித்தது. நாயர் மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் கூறுகையில் டாக்டர் ரமேஷ் பவர்மல் என்பவர் தான் நாயர் மருத்துவமனையின் டீன் மற்றும் இயக்குநர் என்றும் டாக்டர் தருண் கோத்தாரி அல்ல என்று தெரிவித்தார்.

விஷ்வாஸ் நியூஸ், தவறான க்ளைம்களுடன் வைரல் விடீயோவை பகிர்ந்த ஃபேஸ்புக் பயனரின் சமூகப் பின்புலம் குறித்து சரிபார்த்தது. பயனர் அஸ்லி பதான் என்பவர் தானே, மும்பை, மஹாராஷ்ட்ராவில் வசிப்பவர்.

निष्कर्ष: தடுப்பூசிக்கு எதிரான மருத்துவர், டாக்டர் தருண் கோத்தாரி நாயர் மருத்துவமனையின் டீன் என்கிற வைரல் க்ளைம்கள் போலியானவை. டாக்டர் கோத்தாரி இண்டோ அமெரிக்கன் ஹெல்த்கேர் என்கிற தன் சொந்த க்ளினிக்கை புது தில்லியில் நடத்தி வருகிறார்.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later