X
X

Fact Check : மானசரோவர் எல்லையில் ராட்சத நிலவின் வைரல் புகைப்படம் ஏஐ-உருவாக்கம் ஆகும்

ஆனால், விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் வைரல் படம் உண்மையானது அல்ல, செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). மலைக்குப் பின்னால் ராட்சத நிலவு எழும்புகிற வியப்பூட்டும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது – இதை திபெத்-சீனா மானசரோவர் எல்லையில் உள்ள மனதை மயக்கும் இயற்கைக் காட்சி என்று பயனர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் வைரல் படம் உண்மையானது அல்ல, செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

வைரல் பதிவில் இருப்பது என்ன?

வைரல் போஸ்ட்டை பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் வினீதா பிரசாத் “திபெத் சீனா மானசரோவர், எல்லையில் அதிகாலை 3.30 மணிக்கு எடுக்கப்பட்ட படம்” என்று எழுதியுள்ளார்.

போஸ்ட்டின் ஆர்க்கைவ் பதிப்பு.

விசாரணை

எங்கள் விசாரணையைத் தொடங்க, நாங்கள் படத்தை கவனமாக ஆய்வு செய்தோம். மலை, பள்ளத்தாக்கு மற்றும் நிலவின் விகிதாச்சாரங்கள் அசாதாரணமாகத் தோன்றியது, இது ஏஐ உருவாக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது.

ஏஐ படத்தைக் கண்டறியும் கருவியான ஹைவ் மாடரேஷனைப் பயன்படுத்திப் பார்த்ததில், இது ஏஐ உருவாக்கம் என்பதற்கான 89.7% நிகழ்தகவை அது காட்டியது.

இலுமினார்டி என்கிற  மற்றொரு ஏஐ படம் கண்டறியும் கருவி மூலம் இந்தப் படத்தையும் சரிபார்த்த போது, அது ஏஐ உருவாக்கம் என்பதற்கான 93.4% நிகழ்தகவைக் காட்டியது.

இந்தப் படத்தைப் பற்றி ஏஐ நிபுணர் அசார் மச்வேயிடமும் கேட்டோம். இது ஏஐ உருவாக்க படம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

தவறான கூற்றுடன் படத்தைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் வினிதா பிரசாத், 22000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணை, திபெத்-சீனா மானசரோவர் எல்லையில் ராட்சத நிலவைக் காட்டுவதாகக் கூறும் வைரலான படம் ஏஐ உருவாக்கம் என்பதை வெளிப்படுத்தியது.

  • Claim Review : திபெத் சீனா மானசரோவர் எல்லையில் அதிகாலை 3.30 மணிக்கு எடுக்கப்பட்ட படம்
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர் வினீதா பிரசாத்
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later