X
X

Fact Check: அகமதாபாத் சம்பவத்துடன் தவறாக இணைக்கப்பட்ட விபத்துக்குள்ளான விமானத்தின் ஏஐ இமேஜ்

இந்தக் கூற்று போலியானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. இந்தப் படம் ஏஐ உருவாக்கமாகும்.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்) . அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பிறகு, விபத்துக்குள்ளான விமானத்தின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் அகமதாபாத் விபத்தின் பின்விளைவுகளைக் காட்டுகிறது என்ற கூற்றுடன் பகிரப்படுகிறது.

இந்தக் கூற்று போலியானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. இந்தப் படம் ஏஐ உருவாக்கமாகும்.

வைரல் ஆவது என்ன?

ஃபேஸ்புக் பயனர் ஹூஸ்டன் தேசிஸ், இந்த வைரல் படத்தை (ஆர்க்கைவ்டு லின்க்) 13 மே 2025 அன்று ஏர் இந்தியா விபத்துடன் தொடர்புபடுத்தி பகிர்ந்து, “வாழ்க்கை மிகவும் சிறியது, எங்கிருந்து என்ன வரும் என்று நமக்குத் தெரியாது. இந்த துன்ப நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது, குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள்” என்று எழுதியிருக்கிறார்.

விசாரணை

இந்தப் பதிவை ஆராய, முதலில் படத்தை கவனமாகப் பார்த்தோம். அது முழு விமானமும் ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளதாக காட்டுகிறது, அதேசமயம் அகமதாபாத்தில் நடந்த சம்பவத்தில், விமானம் கட்டிடத்தின் மீது மோதி அதன் அருகே விழுந்தது. இந்த முரண்பாடுகள் படம் ஏஐ  பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பின.

மேலும் சரிபார்க்க, ஏஐ படக் கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி படத்தை பகுப்பாய்வு செய்ய முடிவு செய்தோம். ஹைவ் மாடரேஷன் (Hive Moderation), படம் ஏஐ உருவாக்கம் என்பதற்கான 99.8% சாத்தியக்கூற்றைக் சுட்டிக்காட்டியது.

சைட் எஞ்சினும் (SightEngine) இந்தப் படம் ஏஐ உருவாக்கமாக இருப்பதற்கான 99% சாத்தியக்கூற்றைச் சுட்டிக்காட்டியுள்ளது.

‘இஸ் இட் ஏஐ (Is It AI)’ என்கிற மற்றொரு கருவியும், ஏஐ உருவாக்கமாக இருப்பதற்கான 99 சதவீத சாத்தியக்கூற்றை காட்டியது.

இந்த வைரல் பதிவை ஏஐ மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் அசார் மச்வேவுடன் பகிர்ந்து கொண்டோம். அவர் இந்த புகைப்படம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

டைனிக் ஜாக்ரனின் மூத்த நிருபர் சத்ருகன் சர்மாவையும் நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் அகமதாபாத் விபத்து செய்தியை கவனிக்கிறார். மருத்துவ மாணவர் விடுதியில் விமானம் மோதி கட்டிடத்தின் பகுதியளவு சேதமடைந்தது என்றும் அதே வேளை, வைரலான படத்தில் காட்டப்பட்டுள்ள விதத்தில் அதில் மோதவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

வைரலான புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் ஹூஸ்டன் தேசிஸ், 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்களால் பின்தொடரப்படுகிறார்.

முடிவு: அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துடன் தொடர்புடைய வைரல் படம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது என்பதை விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

  • Claim Review : இது அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம்.
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர் ஹூஸ்டன் தேசிஸ்
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later