X
X

Fact Check: டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை அச்சுறுத்தும் வைரல் வீடியோ ஏஐ – உருவாக்கம் ஆகும்.

வைரல் காணொளியில் டொனால்ட் டிரம்பின் ஆடியோ உண்மையானது அல்ல என்றும், அது ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டது என்றும் விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

  • By: Pallavi Mishra
  • Published: May 9, 2025 at 03:13 PM
  • Updated: May 9, 2025 at 03:45 PM

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வரும் ஒரு காணொளியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால், “பாகிஸ்தானை அழித்துவிடுவேன்” என்றும், இந்தியாவை ஆதரிப்பேன் என்றும் கூறுவதைக் காட்டுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று பொய்யான கூற்று என்பதைக் கண்டறிந்தது. வைரலாகும் காணொளி போலியாக உருவாக்கப்பட்டது, மேலும் அதன் ஆடியோ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அசல் காணொளி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

வைரல் ஆவது என்ன?

“வைரல் கிரியேட்டர்” என்ற பேஸ்புக் பயனர் மே 2, 2025 அன்று வைரல் வீடியோவை (ஆர்க்கைவ் லின்க்)  பகிர்ந்துள்ளார். வீடியோவில், டிரம்ப், “எனக்கு போர் வேண்டாம், அமைதி வேண்டும், ஆனால் பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், நான் இந்தியாவை ஆதரிப்பேன், பாகிஸ்தானை அழிப்பேன், சீனாவை எச்சரிப்பேன், நான் இந்திய மக்களை நேசிக்கிறேன்” என்று கூறுவதாக உள்ளது. 

விசாரணை

காணொளியை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, டிரம்பின் வாயைச் சுற்றி காட்சி சிதைவுகள் இருப்பதை விஷ்வாஸ் நியூஸ் கவனித்தது, இது எடிட்டிங் செய்யப்பட்டது என்பதைக் குறிக்கிறது. காணொளி மாற்றியமைக்கப்பட்டது என்கிற சந்தேகத்தை இது எழுப்பியது.

ஒரு ரிவர்ஸ் இமேஜ் தேடல், செப்டம்பர் 15, 2016 அன்று யூடியூப்பில் சி.என்.என்- ஆல் பதிவேற்றப்பட்ட அசல் வீடியோவிற்கு நம்மை இட்டுச் சென்றது. அதன் தலைப்பு, “டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கின் பொருளாதாரக் கழகத்தில் பேசுகையில், பொருளாதாரத்தை 4 சதவீதம் வளர்க்கும் திட்டம் இருப்பதாகக் கூறினார்”. கிட்டத்தட்ட 40 நிமிட வீடியோவான இதில், டிரம்ப் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வரி குறைப்புக்கள் மற்றும் வர்த்தக சீர்திருத்தங்கள் பற்றிப் பேசினார். இந்த முழு உரையிலும் அவர் இந்தியா அல்லது பாகிஸ்தானை எங்கும் குறிப்பிடவில்லை.

டிரம்ப் பேச்சின் முழு உரையின் எழுத்து வடிவத்தையும் நியூயார்க் எகனாமிக் கிளப்பின் வலைத்தளத்தில் கண்டோம். – அதை இங்கே படிக்கலாம். இங்கேயும், இந்த முழு உரையிலும் டிரம்ப் இந்தியா அல்லது பாகிஸ்தானை எங்கும் குறிப்பிடவில்லை என்பதைக் காணலாம்.

இந்த வைரல் காணொளி தொடர்பாக எங்கள் கூட்டாளரான DAU-வை (MCA-வின் ஒரு முயற்சி) தொடர்பு கொண்டோம். DAU-வின் நிபுணர் குழு வீடியோவை பகுப்பாய்வு செய்தது. DAU குழு டீப் ஃபேக் – ஓ – மீட்டர் கருவியைப் பயன்படுத்தி ஆடியோவைச் சரிபார்த்தது. 7 வகைப்படுத்திகளில் 7-ம் இந்த ஆடியோ கிளிப்பை செயற்கை என்று கண்டறிந்தன.

அசாஹர் மச்வேயிடமும் பேசினோம். ஆடியோ ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது என்பதை அவரும் உறுதிப்படுத்தினார்.

வைரல் காணொளியைப் பகிர்ந்த கரண் யாதவ் என்ற பேஸ்புக் குழுவில் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

முடிவு: வைரல் காணொளியில் டொனால்ட் டிரம்பின் ஆடியோ உண்மையானது அல்ல என்றும், அது ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டது என்றும் விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

  • Claim Review : பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், நான் இந்தியாவை ஆதரிப்பேன், பாகிஸ்தானை அழிப்பேன், சீனாவை எச்சரிப்பேன்: டொனால்ட் டிரம்ப்
  • Claimed By : கரண் யாதவ் பேஸ்புக் குழு
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later