
இந்தியாவில் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்று க்ளேட் A13-i க்கு எதிராக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. விஸ்வாஸ் செய்தி முதலில் ஹெலோ பயன்பாட்டில் இடுகையைக் கண்டது. நாங்கள் ஃபேஸ்புக்கில் தேடியபோது, 1,870 பின்தொடர்பவர்கள் கொண்ட நம்ம குமாரபாளையம் என்ற பக்கத்தில் அதைக் கண்டோம். க்ளேட் A13-i தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவதாக வாட்ஸ் பயன்பாட்டில் பல பதிவுகள். இந்த கூற்று போலியானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூற்று
சமூக ஊடகங்களில் ஒரு பதிவு, இந்தியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று குறித்து சுகாதார அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறுகிறது. உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் க்ளேட் A13-i மகாராஷ்டிராவிலிருந்து பரவி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவீதம் பேர் இறந்துவிட்டதாகவும் அந்த இடுகை மேலும் கூறுகிறது. காப்பகப்படுத்தப்பட்ட இடுகைக்கான அணுகல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வு
விசாரணையில், இந்தியாவில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் க்ளேட் A13-i தொற்று குறித்து சுகாதார அமைச்சகம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.
உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் வகை க்ளேட் A13-i இருக்கிறதா என்பதை அறிய இணையத்தில் முதலில் தேடினோம். இருப்பினும், பேஸ்புக் பதிவுகளிளும், சில தமிழ்நாடு ஊடக பதிவுகளிளும் தவிர, இணையத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.
மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுடன் விஸ்வாஸ் செய்தி இணைக்கப்பட்டபோது, அவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி ‘G’ மற்றும் ஆராய்ச்சி மேலாண்மை, கொள்கை, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு (RMPPC), புது தில்லி இயக்குனர் டாக்டர் ரஜ்னி காந்திடம் அனுப்பினார்.
டாக்டர் ரஜ்னி காந்த் மின்னஞ்சலில் எங்களுக்கு அளித்த பதிலில் , “இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) அத்தகைய எச்சரிக்கையை எதுவும் வெளியிடவில்லை. அனைத்து ஆலோசனைகள் / வழிகாட்டுதல்கள் ICMR இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன,” என்றார்.
க்ளேட் A13-i கொரோனா வைரஸ் பற்றி நாங்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர் இதுவரை இது குறித்து எதுவும் கேள்வியுற்றது இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் R.V.. அசோகன், “இது உண்மையில் சரியானதல்ல” என்று கூற்று குறித்த அவரது கருத்துக்காக நாங்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பதிலளித்தார்.
உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் கிளேட் A13-I கண்டுபிடிக்க நாங்கள் மேலும் முயன்றபோது, ஹைதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிளேட் A3i குறித்து ஒரு ஆராய்ச்சியை வெளியிட்டதைக் கண்டோம்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) விஞ்ஞானிகள் – செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB) இந்தியாவில் இருந்து SARS-CoV-2 மரபணுக்களின் தனித்துவமான பைலோஜெனடிக் கிளஸ்டரை (கிளேட் I / A3i) அடையாளம் கண்டுள்ளது.
சி.சி.எம்.பி.யின் ஒரு ட்வீட், “இந்தியாவில் பரவியுள்ள SARS-CoV2 இன் மரபணு பகுப்பாய்வு குறித்த புதிய முன்மாதிரி அடையாளம் கண்டுள்ளோம். ஆய்வு முடிவுகள், வைரஸ் மக்கள்தொகையின் ஒரு தனித்துவமான கொத்து, இதுவரை பெயரிடப்படாதது, இது இந்தியாவில் பரவலாக உள்ளது – இது கிளேட் A3i என அழைக்கப்படுகிறது,” என்று கூறுகிறது.
இருப்பினும், தற்போதுள்ளதை ஒப்பிடும்போது வைரஸின் வீரியத்தை ஒப்பிட தங்களிடம் ஆதாரம் இல்லை என்றும் சி.சி.எம்.பி. கூறுகிறது.
“இந்தியர்களிடையே புதிய வைரஸ் (கிளேட் A3i) இங்குள்ள மற்ற வைரஸ் (கிளேட் A2a)) விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஆபத்தானது என்று உறுதியாகக் கூற இன்னும் எந்த தகவலும் இல்லை” என்று சிசிஎம்பி ட்வீட் செய்தது.
निष्कर्ष: இந்தியாவில் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்று க்ளேட் A13-i பரவுவதாகக் கூறும் இடுகை போலியானது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.