
சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலிகை மைசூர்பா உட்கொள்வதன் மூலம் ஒரு நாளுக்குள் குணமடைவார்கள் என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரல் படம் கூறுகிறது. விஸ்வாஸ் செய்தி இதனை வாட்ஸ்அப்பில் கண்டோம். கோவையில் உள்ள ஒரு தனியார் இனிப்பு கடையின் விளம்பரம் என்பதையம் கண்டோம் . விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்தது.
கூற்று
இனிப்பு கடையின் விளம்பரம், சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலிகை மைசூர்பா உட்கொள்வதன் மூலம் ஒரு நாளுக்குள் குணமடைவார்கள் என்று கூறுகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மூலிகை மைசூர்பா இலவசமாக தருவதற்காக அவர்களை அடையாளம் காண உதவுமாறு கூறுகிறது.
விசாரணை
நாங்கள் இணையத்தில் தேடியபோது, இது குறித்து பல கட்டுரைகளைக் கண்டோம்.
New Indian Expressல் ஒரு கட்டுரை, “கோவையில் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு பிரபலமான ஸ்வீட் ஸ்டால், அவர்களின் மூலிகையான மைசூர்பாவை சாப்பிடுவதன் மூலம் வைரஸ் தொற்றுநோயை ஒரு நாளில் குணப்படுத்த முடியும் என்ற பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது,” என்று கூறுகிறது.
தினசரி செய்திக் கட்டுரையின் படி, 19 மூலிகைகள் பயன்படுத்தி மூலிகை மைசோர் பாக் தயாரிக்கப்பட்டதாகவும், கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என்றும் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் கூறியுள்ளார். தனது முன்னோர்களிடமிருந்து கற்ற சித்தா மருத்துவம் குறித்த அறிவைக் கொண்டு இனிப்பு தயாரிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
விஸ்வாஸ் செய்தி கோயம்புத்தூர் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் G ரமேஷ் குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மூலிகை மைசூர்பா குணப்படுத்தியது எனக்கூறும் விளம்பரம் தவறானது என்று தெளிவுபடுத்தினார்.
“இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸுக்கு மருந்து எதுவும் இல்லை. கொரோனா வைரஸுக்கு மருந்தாக மூலிகை மைசூர்பா உட்கொள்ள நாங்கள் பரிந்துரைக்கவில்லை. விளம்பர கூற்று தவறானது. இதனை விசாரிக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்,” என்றார்.
கோவிட் -19 க்கு குறிப்பிட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை என்று WHO கூறுகிறது. இருப்பினும், சாத்தியமான சிகிச்சைகள் மதிப்பிடும் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. மருத்துவ கண்டுபிடிப்புகள் கிடைத்தவுடன் WHO தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும் என்று கூறுகிறது.
8 ஜூலை 2020 ஆம் தேதி நிலவரப்படி மூலிகை மைசூர்பா கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லை.
निष्कर्ष: சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த மூலிகை மருந்தை உட்கொண்டு குணமடைந்ததாக கூறும் இடுகை தவறானது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.