
கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான ஒரு புதிய தடுப்பூசியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. ரோச் மருத்துவ நிறுவனம் இந்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதாகவும் இந்தப் பதிவு கூறுகிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது. இந்த வைரலான படமானது கொரோனா வைரஸ் தடுப்பூசி அல்ல, இது உண்மையில் ஒரு கோவிட்-19 பரிசோதனைக் கருவி.
பச்சா பாபு யாதவ் என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட ஒரு வைரலான பதிவு பின்வருமாறு: கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான ஒரு புதிய தடுப்பூசியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ரோச் மருத்துவ நிறுவனம் இந்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். காப்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவை இங்கே பார்க்கலாம்.
இந்த படம் குறித்து கூகிள் ரிவர்ஸ் படத் தேடல் செய்து விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையைத் துவங்கியது. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தயாரிப்பானது தடுப்பூசி அல்ல, ஆனால் நாவல் கொரோனா வைரஸ்க்கான பரிசோதனைக் கருவி என்பது தேடலில் தெரியவந்துள்ளது. நாங்கள் இந்த வைரலான படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தயாரிப்பின் உற்பத்தியாளரான சுகன்டெக்கின் இணையதளத்திற்குச் சென்றோம்.
“SGTi-flex COVID-19 IgM/IgG என்பது மனித இரத்தம் (விரலில் குத்தி அல்லது நரம்பு வழியாக எடுக்கும்), சீரம் அல்லது பிளாஸ்மாவில் காணப்படும் COVID-19 இன் IgM மற்றும் IgG நோய் எதிர்ப்புப் பொருட்களின் தரத்தைக் கண்டறிவதற்கான தங்க நுண் துகள்கள் சார்ந்த இம்யூனோகுரோமாட்டோகிராஃபிக் பரிசோதனைக் கருவி ஆகும். இந்தக் கருவிகள் துல்லியமானவை மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானவை மற்றும் முடிவுகளை 10 நிமிடங்களுக்குள் வெறுங் கண்ணால் பார்க்கலாம்” என்று தயாரிப்பு விளக்கமளிக்கிறது
நாங்கள் ‘சுகன்டெக்’ பக்கத்தின் ‘எங்களைப் பற்றி’ என்ற பிரிவை பார்த்த போது, சுகன்டெக் நிறுவனமானது ஆய்வுக்கூட சோதனை முறையில் நோயறிதல் தயாரிப்புகளை வியாபார ரீதியாக தயாரிக்கும் கொரியாவைச் சேர்ந்த உற்பத்தியாளர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
புது டெல்லியிலுள்ள இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் நுரையீரல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் நிகில் மோடியுடன் விஸ்வாஸ் நியூஸ் பேசியது. இந்த வைரலான படத்தை நாங்கள் அவருக்குக் காண்பித்தோம், “இது கொரோனா வைரஸை பரிசோதனை செய்வதற்காக ஒரு கொரிய நிறுவனம் உருவாக்கிய கருவி. இது ஒரு தடுப்பூசி அல்ல. கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசி இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR) வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கான பரிசோதனைக் கருவிகளை பரிந்துரைத்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் கிடையாது. இருப்பினும், சுவாச வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
निष्कर्ष: இல்லை, இந்த வைரலான பதிவிலுள்ள படம் கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசி அல்ல. இது ஒரு கோவிட்-19 பரிசோதனைக் கருவி.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.