
கொரோனா வைரஸ் பீகார் மாவட்டமான பூர்னியாவிற்கு வந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி டாக்டர் வினோத் குமாரிடம் சென்றார், ஆனால் அவர் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அந்த பதிவு கூறுகிறது. பின்னர் அவர் பாகல்பூருக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார். கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இறைச்சி மற்றும் மீன்களை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் மற்றும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அது கூறுகிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது.
சரோஜ் செளராஸியா என்ற பயனர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு பின்வருமாறு:
கொரோனா வைரஸ் பீகார் மாவட்டமான பூர்னியாவிற்கு வந்துவிட்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி டாக்டர் வினோத் குமாரிடம் சென்றார், ஆனால் அவர் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. பின்னர் அவர் பாகல்பூருக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார். கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இறைச்சி மற்றும் மீன்களை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் மற்றும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அது கூறுகிறது.” காப்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவின் பதிப்பை இங்கே பார்க்கலாம்.
பூர்னியா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் மதுசூதன் பிரசாத் அவர்களை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டு தனது விசாரணையைத் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்டோம். “பூர்னியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. இது சமூக ஊடகங்களில் பரவும் ஒரு பொய்யான செய்தி” என்று அவர் கூறினார்.
இந்த பொய்யான பதிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள டாக்டர் வினோத் குமாரின் மறுப்பு கடிதத்தை நாங்கள் தேடி, கண்டுபிடித்தோம். பதிவிலுள்ள வாசகம் பின்வருமாறு: “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை நான் பாகல்பூருக்கு செல்லுமாறு பரிந்துரைத்ததாக எனது பெயருடன் பொய்யான செய்திகளை சில சமூக விரோத கும்பல்கள் பரப்பி வருகின்றன என்பதை பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வினோத் குமாராகிய நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல். இது ஏதோ ஒரு விதத்தில் என்னை குறிவைத்துள்ளது. இதுபோன்ற நோயாளி எனது கிளினிக்கிற்கு ஒருபோதும் வந்ததில்லை,” 2020 பிப்ரவரி 7 தேதியிட்ட இந்தி கடிதம்.
டாக்டர் விநோத் குமாரிடம் விஸ்வாஸ் நியூஸ் பேசியது. அவர் கூறுகையில்: “இந்த கடிதம் உண்மையானது, இது அவரால் வெளியிடப்பட்டதுதான். பூர்னியாவில் இதுபோன்ற எதுவும் நடக்கவில்லை. சமூக விரோத கும்பல்கள் அவருடைய பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.”
மீன் மற்றும் இறைச்சியை மூன்று மாதங்களுக்கு தவிர்க்குமாறு இந்த வைரலான பதிவு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நிலையான பரிந்துரைகளில் அடிக்கடி கை கழுவுதல், இருமும் போது மற்றும் தும்மும் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேக வைத்தல் ஆகியவை அடங்கும். இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச நோயின் அறிகுறிகள் யாரிடமும் இருப்பது தெரிந்தால் அவர்களுடன் நெருங்கி பழகுவதைத் தவிர்க்கவும்.
மீன் மற்றும் இறைச்சியை 3 மாதங்களுக்கு தவிர்ப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கொரோனா வைரஸ் நோயாளிகள் பற்றிய நேரடி கண்காணிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளளது.
निष्कर्ष: முடிவு: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி பீகார் வந்துள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறும் பதிவு பொய்யானது. பொய்யான அறிக்கையை சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும், மீன் மற்றும் இறைச்சியைத் தவிர்க்குமாறு WHO பரிந்துரைக்கவில்லை. நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை இது பரிந்துரைத்தது. இருப்பினும், முகக் கவசம் அணிவது நல்லது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.